You can earn upto 2 lakh rupees a month by using Tiktok
Tiktok-ஐ எப்படி பயன்படுத்தலாம்?
வெகு விரைவாகவே உலக அளவில் மிக பிரபலம் ஆகிவட்டது டிக் டாக். இதன் மூலம் பல கோடி வருவாய்களை மாதந்தோறும் டிக் டாக் நிறுவனம் ஈட்டி வருகிறது. டிக் டாக் ஐ பயன்படுத்துபவர்களில் சிலரும் அதை முறையாக பயன்படுத்தி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக நம் தமிழகத்தில் கூட, Pana Matta என்ற பெயரில் YouTube-ல் 4,60,000 Subscribers பெற்று, இன்று மாதம் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை சம்பாதித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு நகைச்சுவை. ஏற்கனவே விஜய் டிவியில் பிரபலமாக இருந்த மதுரை முத்து நகைச்சுவைை நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டி இவர்கள் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளனர். இந்த நகைச்சுவைக்கு சொந்தக்காரரான மதுரை முத்துவிற்கே இவ்வளவு சம்பளம் கிடைக்காது.
Tiktok மூலம் எப்படி சம்பாதிப்பது?
மக்களுக்கு பிடித்தவற்றை அல்லது உங்களுக்குப் பிடித்தவற்றை தொடர்ந்து டிக்டாக்கில் வீடியோவாக பதிவு செய்யுங்கள். உங்களுக்கு குறைந்தது ஒரு லட்சம் Followers வந்த பிறகு அவர்களை YouTube-ற்கு வரவழையுங்கள். பிறகு தொடர்ந்து Tiktok மற்றும் YouTube-ல் வீடியோக்களை பதிவு செய்து வாருங்கள். அதன் மூலம் உங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
Youtube மூலம் நல்ல வருவாய் கிடைத்தவுடன் Tiktok-ல் வீடியோ பதிவு செய்வதை நிறுத்தி விடக்கூடாது. அப்படி நிறுத்தி விட்டால் உங்களின் YouTube Subscribers-ஐ இழக்க நேரிடும்.
எப்படிப்பட்ட வீடியோக்களை Tiktok-ல் பதிவு செய்யலாம்?
தினமும் சமையல் செய்வதை சுலபமாக வீடியோ எடுத்து பதிவு செய்யலாம்.
உங்களுக்கு பிடித்தவற்றை ஒரு ஓவியமாக வரைந்து அந்த ஓவியம் வரைவதை fast forward-ல் வீடியோவாக பதிவு செய்து Tiktok-ல் Upload செய்யலாம்.
தினமும் நாம் உணவு சாப்பிடுகிறோம். அதை உங்களுக்கு வேகமாக சாப்பிடும் திறமை இருந்தால், இரண்டு முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஒரு வீடியோவாக எடுத்து அதை டிக்டாக்கில் பதிவு செய்யலாம்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் ஆபாசமாக எந்த ஒரு வீடியோவும் டிக்டாக்கில் சுலபமாக பதில் செய்து விடலாம் ஆனால் YouTube-ல் பதிவு செய்தால் உங்களின் சேனல் முடக்கப்படும். இதனால் உங்களின் ஒட்டுமொத்த முயற்சிகளும் வீணாகிவிடும்.
சினிமா பாடல்களையோ அல்லது சினிமா படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சிகளில் உள்ள வசனத்தையோ Tiktok-ல் பதிவு செய்யலாம். ஆனால் YouTube-ல் பதிவு செய்தால் உங்களுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் வராது. அதனால் சொந்த முயற்சியில் உங்களுக்கு தெரிந்தவற்றை வீடியோவாக பதிவு செய்யுங்கள். அதில் சினிமா தொடர்பான எந்த ஒரு விஷயமும் இருக்கக்கூடாது.
மேற்கண்டவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவற்றை கமெண்டில் தெரிவியுங்கள்.

Nice
ReplyDeleteThis should be the best collection of blogging website i ever found out.
ReplyDeleteBuen artículo! Gracias.. Rozelle Giffard Kathie
ReplyDelete